திருவையாறு: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாய்ப்புண் பரிசோதனை

68பார்த்தது
திருவையாறு: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாய்ப்புண் பரிசோதனை
திருவையாறு வட்டாரத்தைச் சேர்ந்தோர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாய்ப்பரிசோதனை செய்துகொள்ளலாம். இதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு வட்டாரம் நடுக்காவேரி, செந்தலை, திருவாலம்பொழில் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்பட்ட வாய்ப்புண் இருந்தாலோ அல்லது உணவு தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது வாய் எரிச்சல் இருந்தாலோ அல்லது புகையிலை புகைப்பழக்கம் இருந்தாலோ நடுக்காவேரி சுகாதார நிலையத்தை அணுகி வாய்ப்பரிசோதனை செய்துகொள்ளலாம். அந்தந்த கிராமங்களுக்கு வரும் மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்களிடம் தெரிவித்து முதற்கட்ட பரிசோதனை செய்துகொள்ளலாம். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துகொள்வது புற்றுநோயிலிருந்து கூடப் பாதுகாத்துக்கொள்ள வழிவகுக்கும். இவ்வாறு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி