ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன் (வயது 46). தொழிலாளி. இவருக்கு உஷாராணி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று காலையில் ஆவணத்தில் உள்ள ஒரு அரசு அலுவலக வளாகப் பகுதியில் சிவனேசன் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவனேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவனேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.