தஞ்சாவூரில், மாணவர்களுக்கு குளிர்கால உண்டு உறைவிடப் பயிற்சி

65பார்த்தது
தஞ்சாவூரில், மாணவர்களுக்கு குளிர்கால உண்டு உறைவிடப் பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் "தலைமையே தகைமை" என்ற தலைப்பில், 28 மாவட்டங்களைச் சார்ந்த பள்ளிகளுக்கான 5 நாட்கள் குளிர்கால உண்டு, உறைவிட பயிற்சி டிச. 26 முதல் 30 ஆம் தேதி வரை வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.  
இதில், உதவித் திட்ட அலுவலர் ரமேஷ்குமார் வரவேற்றார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. ரவிச்சந்திரன், பதிவாளர் முனைவர் பி. கே. ஸ்ரீவித்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அண்ணாதுரை,  
மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாதவன், சுந்தர், அய்யாகண்ணு, சாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார்.
இதில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் 140 மாணவர்கள் மற்றும் 28 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி