பாணாதுறை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம்

70பார்த்தது
பாணாதுறை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம்
கும்பகோணம், பாணாதுறை பகுதியில் ஜலசந்திரமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உற்சவம் கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு மலர் அலங்காரத்தில் சாமி, அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றின் கரையில் இருந்து அக்னி கொப்பரை, வேல், பாலுக்குடம், காவடி, அலகு காவடி ஆகியவற்றை பக்தர்கள் எடுத்து கொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்று கோவிலை அடைந்தனர். 

தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு அக்னி சக்தி கரகங்களுடன் அம்மன் வீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி