ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய தனிப்பரிவு போலீஸ்காரர் மணிகண்டன். இவர் மீது பணியின் நிமித்தமாக பல்வேறு புகார்கள் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து வந்தது. இதையடுத்து தஞ்சை எஸ்பி ஆஷிஷ்ராவத், திருவோணம் போலீஸ்காரர் மணிகண்டனை தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.