ஒரத்தநாடு யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்களின் நிறைவுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவர் திமுக ஒன்றிய குழுத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஒன்றியப்பொது நிதியிலிருந்து 217 வேலைகள் தொடங்கப்பட்டு சுமார் 11 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, திமுக தஞ்சை மத்திய மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லா ரமேஷ் குமார், மாவட்ட கவுன்சிலர்கள் விஜி கதிரவன், சுபா ஆனந்தன், ஒரத்தநாடு நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம உள்ளாட்சி)