தஞ்சை: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

78பார்த்தது
தஞ்சை: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்ப யிற்சி நிலையங்களில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

அதன்படி, www. skilltraining. tn. gov. in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலை யங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் அட்டை, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப் படம், ஆதார் அட்டை போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக சென்று விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்யலாம்.

இதற்கு தகுதியாக 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 8-ம் வகுப்பு கல்வித்தகுதிக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் வங்கி பரிவர்த்தனை அட்டை, யூ. பி. ஐ. மூலம் விண்ணப்ப கட்டணம் ரூ. 50-ஐ செலுத்தவேண் டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய் வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி