தஞ்சை: தாய் தந்தை இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவி செய்ய நடவடிக்கை

85பார்த்தது
தஞ்சை: தாய் தந்தை இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவி செய்ய நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் தாய், தந்தை இருவரும் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில், 597 குழந்தைகளுக்கு தாய், தந்தை இருவரும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், 12 ஆயிரம் குழந்தைகளுக்கு தந்தையும், 2,900 குழந்தைகளுக்கு தாயும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதில், முதல் கட்டமாக தாயும், தந்தையும் இல்லாத குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு வருவாய்த்துறை அலுவலரை பொறுப்பாளராக நியமித்துள்ளோம். அக்குழந்தைகள் எந்தக் குடும்பத்தில் இருக்கின்றனரோ, அக்குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அக்குழந்தைகளின் படிப்பு எக்காரணத்தைக் கொண்டும் நிற்காமல், பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, உயர் கல்விக்குப் போக வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இடைநிற்றல் தவிர்ப்பதற்காக கல்வித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க உறுதிப்படுத்துகின்றனர் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி