தஞ்சை: திருவோணம், ஊரணிபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

51பார்த்தது
தஞ்சை: திருவோணம், ஊரணிபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, திருவோணம், தோப்புவிடுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி