தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள், பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் தஞ்சை-நாகை சாலையில் தென்புறம் உள்ள வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்வாராமல் நாணல் புதர்கள் மண்டிகிடக்கின்றன. இதில் இருந்து பிரியும் வண்ணயகரம்பை வாய்க்காலும் புதர் மண்டியுள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் தூர்வாராமல் இருப்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது 2 நாள் பெய்த மழையிலேயே தண்ணீர் வடியாமல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன. இதுகுறித்து உடனடியாக வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்களுடன் வந்து ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்