தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் பழனியப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, மத்திய மாநில அரசுகளின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்தும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 03 தேதி தஞ்சையில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டிற்கு விவசாயிகள் பெருமளவில் ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.