தஞ்சை காவேரி சிறப்பு அங்காடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்களுக்கு புதிய எச்டிவி செட்டாப் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் ஜீவா, அரசு கேபிள் டிவி பொது மேலாளர் துரை, துணை மேலாளர் கவுதம், கேபிள் டிவி தனி தாசில்தார் ரத்தினவேல் உட்பட்டோர் கலந்துகொண்டு ஆபரேட்டர்களுக்கு புதிய எச்டிவி செட்டாப் பாக்ஸை வழங்கினர். இது குறித்து கேபிள் டிவி வாரிய தலைவர் ஜீவா கூறியதாவது: தொழில்நுட்ப மேம்பாடு சரிசெய்ய கால தாமதம் ஆனதால் தான் அரசு கேபிள் எச்டிவி பாக்ஸ் வழங்க தாமதம் ஏற்பட்டது.
இப்போது சரிசெய்யப்பட்டு அனைத்து ஆபரேட்டர்களுக்கும் எச்டிவி பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எச்டிவி பாக்ஸுக்காக கூடுதல் கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றார்.