தஞ்சாவூரில் நாளை (அக். 5) உயர் கல்விக்கடன் சிறப்பு முகாம்

85பார்த்தது
தஞ்சாவூரில் நாளை (அக். 5) உயர் கல்விக்கடன் சிறப்பு முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டு அக். 05 சனிக்கிழமையன்று தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.  

மாவட்ட அளவில் நடைபெறும் கல்விக்கடன் மேளாவில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கல்விக் கடன் பெற விரும்பும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பெற்றோர், பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல்,  10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல்,  குடும்ப அட்டை நகல், பான்கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -2,  ஆண்டு வருமானம், சாதிச்சான்றிதழ் நகல் மற்றும் முதல் பட்டதாரி சான்று நகல்,  கல்லூரியில் கல்வி பயில்வதற்கான சான்று (Bonafide Certificate),  கல்வி கட்டண விபரச்சான்று,  மாணவ, மாணவியர்களின் மற்றும் பெற்றோர், பாதுகாவலரின் வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி