திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக் கோட்டை போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திப்பன்விடுதி பகுதியில் சென்ற ஒரு லோடு ஆட்டோவையும், அதன் பின் வந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி போலீசார் சோதனையிட முயன்றனர். இதனால் லோடு ஆட்டோவையும், மோட்டார் சைக்கிளையும் அங்கேயே போட்டுவிட்டு 4 பேர் அங்கிருந்து ஓடிவிட்டனர். போலீசார் லோடு ஆட்டோவை சோதனை செய்த போது, அந்த வாகனத்தில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லோடு ஆட்டோவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து வாட்டாத்திக் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.