வருவாய்த்துறை அலுவலர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

58பார்த்தது
வருவாய்த்துறை அலுவலர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தஞ்சையில் வருவாய்த்துறை அலு வலர்கள் 2வது நாளாக ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முது நிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை யின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையை உடன் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். உறுப்பினர்கள் ரவிக்குமார், கிருஷ்ணமூர்த்தி, பிராங்கிளின், பாலா, யுவராஜா, வினோத், குமார், தமிழரசி, சாந்தி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சை தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி