அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நடந்தது. விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு பேசினார். முருகன் சொல்லி எம்.பி., அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஆர். ரெங்கராஜன், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இப்பள்ளி முன்னாள் மாணவரும், முன்னாள் எம்.பி.யுமான எல். கணேசன், வயது முதிர்ந்த நிலையில் விழாவில் கலந்து கொண்டு தான் படித்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பேசினார்.