கண்டன ஆர்ப்பாட்டம் அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு

57பார்த்தது
கண்டன ஆர்ப்பாட்டம் அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியம் மேலசெம்மங்குடி ஊராட்சியில் கடந்த 8  ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்த புவனேஸ்வரிடம் பணி நிரந்தரம் செய்வதற்கு ரூபாய் 50, 000 லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்ததால் அவருக்கு 11 மாதமாக சம்பளம் கொடுக்காமல் எந்த தவறும் செய்யாதவரை பொய்யாக காசோலை மோசடி செய்தார் எனக்கூறி பணியில் இருந்து வலுக்கட்டாயமாக தன்னிச்சையாக நீக்கிய மேலசெம்மங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி
நிர்வாகத்தை
கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற இருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் உமாபதி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் தோழர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தூய்மை பணியாளருக்கு 3 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படும் என்று கூறியதின் பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது,

தொடர்புடைய செய்தி