தஞ்சாவூர்: நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மறுபடி தொடங்க கோரி ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
தஞ்சாவூர்: நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மறுபடி தொடங்க கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி - தாம்பரம் விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்கம், தஞ்சை - திருச்சி ரயில் பணிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் அயனாவரம் நடராஜன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் வழக்குரைஞர் ஜீவகுமார் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் வழியாக திருச்சி தாம்பரம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, வழக்குரைஞர் உமர் முக்தர், முகமது பைசல், ராம. சந்திரசேகரன், நேரு, ரமேஷ், ஹாஜா மைதீன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி