தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள ஒக்கநாடு மேலையூர் மழவராயர் தெரு பகுதியில் அமைந்துள்ள பொது சுடுகாடு மயானம் புதர்கள் முள் காடுகள் அமைந்த காட்டின் உள்பகுதியில் அமைந்துள்ளது இந்த பகுதியில் விஷப் பாம்புகள் அதிக அளவில் நடமாடுவதால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் போது ஆபத்தை சந்திக்கும் நிலை உருவாகிவிட்டது சுகாதாரமில்லாமல் புதரில் இந்த மயான பாதை அமைந்துள்ளது மயான முழுவதும் புதர்களோடு காட்சி தருவதால் இறந்தவர்களின் உறவினர்கள் நண்பர்கள் அந்த பகுதியில் செல்வதற்கு அச்சத்துடன் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாததால் பொது மக்கள் தஞ்சாவூர் ஆட்சியர் மற்றும் தஞ்சை மாவட்ட ஊராட்சிகள் இயக்குனர் ஆகியோர் இது குறித்து ஆய்வு செய்து மயானத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள மனிதர்கள் நடந்து செல்லும் நிலையை உருவாக்கி ஆபத்தை தரும் பாம்புகள் வராமல் சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்