மகப்பேறு விடுப்பில் உள்ள செவிலியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.