பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராம பகுதிகளில் அதிக அளவு வட மாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு நிலவும் வேலை ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் நடவு, நாற்றுப்பறித்தல் முதலிய பணிகளை சுறுசுறுப்புடன் செய்து வருகின்றனர். 30 பேர் அடங்கிய இந்த வட மாநில குழுவினர் கிராமப் பகுதியிலேயே தங்கி இருந்து இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.