தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பார்சல் கட்டும் மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புபவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு அளவுகளினால் ஆன பெட்டிகளை கொண்டு குறைந்த கட்டணத்தில் பார்சல் செய்து தரப்படுகிறது. பார்சல் செய்து கொடுப்பதற்கு தேவையான பொருட்களுடன் பெட்டியின் மீது ஒட்டப்படும் டேப் ஒட்டுவதற்கான எந்திரம் தஞ்சை தலைமை தபால் நிலைய பார்சல் கட்டும் மையத்தில் உள்ளது. தற்போது பார்சலின் மேல் மெல்லியதாக சுற்றும் டேப் எந்திரம் உள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தேவையான பொருட்களை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனுப்புவதற்கு தலைமை தபால் நிலைய பார்சல் கட்டும் மையத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.