விவசாயிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

50பார்த்தது
விவசாயிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் தஞ்சையில் அளித்த பேட்டி:

இந்தியா முழுமையிலும் அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை (13ம் தேதி) டில்லியில் போராட்டம் நடத்த அறைகூவல் விட்டது. அதனை ஏற்று பஞ்சாப், ஹரியானா, உ. பி. உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லி நோக்கி வந்து கொண்டுள்ளனர்.
இதையறிந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பஞ்சாபில் விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப் போது 8 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டார். ஆனால் விவசாயிகள் இதை ஏற்க மறுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தினோம். தொடர்ந்து இன்று (12ம் தேதி) மாலை 3 மணிக்கு பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் 5க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனை ஏற்று தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் என்ற
முறையில் நானும் பங்கேற்கிறேன். இதில் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை, டில்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுதல், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி