அய்யம்பேட்டை அருகே பால்குட திருவிழா

84பார்த்தது
அய்யம்பேட்டை அருகே பால்குட திருவிழா
அய்யம்பேட்டை அருகே உள்ள உள்ளிக்கடையில் மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. இதில், முன்னதாக காவிரி கரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சக்தி கரகம், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம், வீதி உலாவாக கோவிலுக்கு வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி