தமிழ்நாடு காட்டுநாயக்கன் ஜனநாயக சீர்திருத்த சங்க புதிய கிளை திறப்பு மாநில, மண்டல, மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தஞ்சையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், மாநில தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உதவி தலைவர் பொன்சேகர், ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் சண். ராமநாதன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். காட்டுநாயக்கன் பழங்குடியின வாரியாக மக்கள் தொகை புள்ளி விவரங்கள் சேகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு சதவீதத்தை ஏழு விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைச் செயலாளர் ரமேஷ் தலைவர், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.