தஞ்சையில் நெடுந்தொலைவு ஓட்ட போட்டி

58பார்த்தது
தஞ்சையில் நெடுந்தொலைவு ஓட்ட போட்டி
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தொலைவு ஓட்டப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவும் பெண்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தொலைவும், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவும் போட்டி நடைபெற்றது. அன்னை சத்யா விளையாட்டரங்கில் தொடங்கி முனிசிபல் காலனி, மருத்துவக் கல்லூரி, தென்னக பண்பாட்டு மையம் வரை சென்றடைந்து மீண்டும் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடையும் வகையில் இந்த போட்டி நடைபெற்றது. 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 142 பேரும் பெண்கள் பிரிவில் 136 பேரும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் 90 பேரும் பெண்கள் பிரிவில் 35 பேரும் என மொத்தம் 403 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஐந்தாயிரம், மூன்றாயிரம், 2000 பரிசு வழங்கப்பட்டது. மேலும் நான்கு முதல் பத்தாம் இடம் வரை வெற்றி பெற்றவர்களுக்கு 1000 வீதம் மொத்தம் 68, 000 பரிகத்தொகை காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், கூடைப்பந்து பயிற்றுனர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி