ஒரத்தநாடு அருகே பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

4216பார்த்தது
ஒரத்தநாடு அருகே பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒரத்தநாட்டை அடுத்துள்ள சின்னபொன்னாப்பூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவருக்கு செல்வி, விஜயா (வயது48) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை சின்னையனின் முதல் மனைவி செல்வியின் மகன் தங்கமணி (26) கூலித்தொழிலாளி. இவருக்கும், சின்னையனின் 2-வது மனைவி விஜயா (48) ஆகிய இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தங்கமணி தான் வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த விஜயாவை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு காவல் துறையினர் விஜயாவை கத்தியால் குத்திய தங்கமணியை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு தங்கமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you