கும்பகோணம் அருகே அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 6 வயதான 1-ம் வகுப்பு மாணவியிடம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கணேசன் என்பவர் சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆடுதுறையில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கணேசனை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.