கும்பகோணம்: ஆகாச மாரியம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்

53பார்த்தது
கும்பகோணம்: ஆகாச மாரியம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் திருநறையூரில் அமைந்திருக்கும் ஆகாசமாரியம்மனுக்கு தனிக்கோவில் கிடையாது. விக்கிரகம் இல்லை. ஆனால், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி, 13 நாட்களுக்கு நடைபெறும் விழா பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 

சமயபுரம் மாரியம்மன் ஒவ்வொரு வருடமும் திருநறையூர் திருத்தலம் வந்து, 10 நாட்களுக்குத் தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறார் என்பது ஐதீகம். இதற்கான விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆகாசமாரியம்மன் லட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

தொடர்ந்து விழா நாட்களில் மதனகோபால, மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி என தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கிறார். 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெரிய திருவிழா நடக்கிறது. அன்று காலை முதல் அங்கப்பிரதட்சணம், காவடி, அழகுக்காவடி, தொட்டில் கட்டுதல், மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் துரை சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர் எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜீ மற்றும் கவுரவ குலமுன்னேற்ற சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி