கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் வீரராகவபுரம் செம்மொழி நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் சத்யராஜ் (வயது 37). இவர் வெளியில் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் கடன் பிரச்சினை தாங்க முடியாமல் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு சத்யராஜ் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.