தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரி மாணவி ம. ராஜஸ்ரீ, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வில், இளநிலை வணிகவியல் துறையில், பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றார்.
முதலிடம் பெற்ற மாணவி ம. ராஜஸ்ரீயை, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருது பாண்டியன் சால்வை அணிவித்து, பாராட்டி வாழ்த்தினார். அப்போது கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணை முதல்வர் ரா. தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.