ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு குடிகாடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் நிர்மல் (வயது 22), இவரை முன்விரோதம் காரணமாக ஆம்பலாப்பட்டு தெற்கு பரங்கிவெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ஜோதிபாசு (35) மற்றும் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியைச் சேர்ந்த அப்பாக்கண்ணு மகன் ஜோதிபாசு (47) ஆகிய இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நிர்மல் கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமையா மகன் ஜோதிபாசு மற்றும் அப்பாக்கண்ணு மகன் ஜோதிபாசு ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இருவரின் உறவினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்குச் சென்று போலீசாரிடம் முறையிட்டனர். பிறகு பாரபட்சமான முறையில் போலீசார் நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்திருப்பதாக கூறி பாப்பாநாடு போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.