தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவமனை பணியாளர் தற்காலிக காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவமனை பணியாளர் (palliative care hospital worker) (MPHW) இரண்டு காலிப் பணியிடங்களுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த மாத ஊதியமாக ரூபாய் 8,500 மட்டும் வழங்கப்படும். இந்த பணியிடம் 11 மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடம் பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. உரிய கல்வித் தகுதி உடையவர்கள், கல்விச் சான்றிதழ்களுடன், முதல்வர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் என்ற முகவரியில் வரும் ஏப்ரல் 10 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.