தஞ்சாவூரில் நேற்று ஓ. பி. எஸ். , ஆதரவாளரும், ஒரத்தநாடு எம். எல். ஏ. , வுமான ஆர். வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க. , தொண்டர்கள் 99. 9 சதவீதம் பேர் கட்சி ஒன்றாக இணைய வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலிலதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள்.
அந்த எண்ணத்தை எம். ஜி. ஆர். , ஜெயலலிதா ஆன்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. இருப்பினும், ஆனால், அ.தி.மு.க., இணைய கூடாது என விரும்பாதவர்கள் தானாகவே அ.தி.மு.க., வை விட்டு வெளியேறி விடுவார்கள்.
இது காலத்தின் கட்டாயம். ஒற்றைத் தலைமையா? , இரட்டைத் தலைமையா? என்பது அ. தி. மு. க. , இணையும் போது முடிவுக்கு வரும். வரும் டிசம்பருக்குள் அ.தி.மு.க., ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அன்றைக்கு அ.தி.மு.க. , தனித்து நின்றே 150 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என பழனிசாமி கூறி எல்லோரையும் ஏமாற்றினர்.
லோக்சபா தேர்தலிலும் பெரிய மகா கூட்டணி உருவாகும் நாம் 40 சதவீதம் வெற்றி பெற்று விடலாம் என கூறினார்.
அ.தி.மு.க., ஒன்றிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். சசிகலா பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம் இவ்வாறு அவர் கூறினார்.