ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியருக்கு தமிழகத்தின் தலைசிறந்த பசுமை ஆசிரியர் விருது - 2024 விருது வழங்கப்பட்டது.
பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை தர்மபுரி முப்பெரும் விழாவில் பசுமையை பேணிக் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படும் நபர்களை கண்டறிந்து விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் இணைச்செயலர் ஆறுமுகத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் விருது வழங்கி சிறப்பித்தார். அதேபோல் ஈச்சங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பசுமை ஆசிரியர் பஞ்சாபகேசனுக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் திருமங்கலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருக்குமரன், கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.