திருவையாறு அருகே ஆச்சனுார் உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோமளவல்லி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் தாசன், மரூர் காவல் நிலைய எஸ்ஐ ராஜேஸ்கண்ணன், ஊராட்சி எழுத்தர் அய்யப்பன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய அறிவுரைகள் வழங்கினர். மாணவ, மாணவிகள் ஆச்சனுார் பகுதியில் வீடு வீடாகச் சென்று போதைப் பொருள் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். போதைப் பொருள் எடுக்க மாட்டோம், யாரையும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பூபதிராமன் நன்றி கூறினார்.