பட்டுக்கோட்டையில் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்

54பார்த்தது
பட்டுக்கோட்டையில் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவுமான அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன் வரவேற்றார். 

கூட்டத்தில் சட்டத்துறை இணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திமுக தலைமை கழக வழக்கறிஞர் நாகை தினேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திமுக சட்டத்துறை சார்பில் வழக்கறிஞர் அணியின் மூன்றாவது மாநில மாநாடு வரும் ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுவது குறித்தும், அந்த மாநாட்டில் தஞ்சை தெற்கு மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி