ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் பொய்யுண்டார்கோட்டை ஊராட்சி பொய்யுண்டார் தெரு-வீரடிவாரி இடையே புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியையும், வாண்டையார் தோட்டத்தில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணி தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பொய்யுண்டார்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரும், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளருமான செ. ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெ. ராஜா பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.