மருங்குளம் பகுதியில் சம்பா நடவு பணி தொடக்கம்

168பார்த்தது
மருங்குளம் பகுதியில் சம்பா நடவு பணி தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள மருங்குளம் பகுதியில் சம்பா சாகுபடிக்காக நாற்று நடும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் கோடை, குறுவை, தாளடி என சாகுபடி செய்து வருகின்றனர். சில இடங்களில் மின்மோட்டார் இல்லாத விவசாயிகள் மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரை நம்பி ஒருபோகம் மட்டும் சாகுபடி செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்காக அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் ஆறுகளில் போதிய தண்ணீர் வரவில்லை. பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே சம்பா பணிகளை தொடங்கி விட்டனர். போதிய தண்ணீர் வராததாலும் மழை பெய்யாததாலும் சம்பா சாகுபடியை விவசாயிகள் தாமதமாக தொடங்கினர். சம்பா சாகுபடி பொருத்தவரை விவசாயிகள் 180 நாட்கள் வளரக்கூடிய நெல்லைதான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பது வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாற்று பறிக்கும் பணி மற்றும் நடவு பணியில் பெண்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி