ஒரத்தநாட்டில் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா

53பார்த்தது
ஒரத்தநாட்டில் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட ஒரத்தநாடு ஒன்றியக் குழு சார்பில் கட்சியின் நூற்றாண்டு விழா, மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒரத்தநாட்டில் ஒன்றிய செயலாளர் வாசு இளையராஜா தலைமையில் நடைபெற்றது. இதில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் பேசுகையில், 'இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே நிதி மூலதனம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களையும், நாட்டின் வளங்களையும் ஒட்டச் சுரண்டுகிறது. அதேபோல உலகமெங்கும் உழைக்கின்ற மக்களின் உழைப்புகளையும், வளங்களையும் சூறையாடுகிறது.
இதற்கு மாற்றாக 175 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க மார்க்சியத்தை நாம் ஏற்றுக் கொண்டு, இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே மாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டும்.

மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜக நாட்டின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது, ஏழை எளிய மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன, மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, மக்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை, வேலைக்கு கூலி கிடைப்பதில்லை இந்த நிலைமைகளை நாம் மாற்ற வேண்டும். கம்யூனிஸ்ட்
கட்சியின் நூற்றாண்டு விழாவில் உறுதி ஏற்கவேண்டும் என்றார். நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, ஒன்றிய செயலாளர் கோசிமின், மாவட்ட துணைச் செய லாளர் கோ. சக்திவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி