பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் உத்தரவின்படி பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுருளிராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் யாருடையது என்பது தெரியவில்லை. இந்த தீவிபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.