அம்மாப்பேட்டை அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டியை அம்மாப்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் மறிக்க முயன்றனர். அப்போது வண்டியில் வந்தவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாட்டுவண்டியில் வந்தவர் அம்மாப்பேட்டை அருகே பள்ளியூர் மேல தெருவை சேர்ந்த ராமசாமி என்பதும், அரசு அனுமதியின்றி வெண்ணாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராமசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.