தஞ்சாவூரில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை

64பார்த்தது
தஞ்சாவூரில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு, மீனாட்சி மருத்துவமனையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இக்குழுவில் மீனாட்சி மருத்துவமனையின் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா, மயக்க மருந்தியல் நிபுணர் ஜி. அரிமாணிக்கம், கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரலியல் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையியல் துறை இயக்குநர் ஜாய் வர்கீஸ், கல்லீரல் அறிவியல் மையத்தின் கிளினிக்கல் லீட் முதுநிலை நிபுணர் ரஜனிகாந்த் பாட்சா, மயக்க மருந்தியல் துறைத் தலைவர் செல்வகுமார் மல்லீஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவர் பிரசன்னா தெரிவித்தது: டெல்டா மண்டலத்தில் முதன்முதலாக மீனாட்சி மருத்துவமனை மற்றும் கிளெனீக்ல்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் குழு மேற்கொண்ட இந்த வெற்றிகரமான உறுப்புமாற்று சிகிச்சையால் நோயாளிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி