சென்னையில் நடைபெற உள்ள தர்ணாவில் திரளானோர் பங்கேற்க முடிவு

56பார்த்தது
சென்னையில் நடைபெற உள்ள தர்ணாவில் திரளானோர் பங்கேற்க முடிவு
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், மாவட்டக் குழு கூட்டம், தஞ்சையில் மாவட்டத் தலைவர் டி. கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி. எம். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.  

இதில், மாவட்ட துணைச் செயலாளர்கள் சி. ஏ. சந்திரபிரகாஷ், கோவி. ராதிகா மற்றும் சுகுமார், அனிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், "உதவித்தொகை கேட்டு மனுச் செய்து, காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு கொடுக்கும் உதவித்தொகை போதுமானதாக இல்லை. ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைப் போன்று குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.  

100 நாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு தடையின்றி கிடைத்திட வலியுறுத்தி, எதிர்வரும் அக். 23ஆம் தேதி சென்னையில் நடைபெறக்கூடிய தர்ணா போராட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 250 பேர் கலந்து கொள்வது, அதேபோல் மாற்றுத்திறனாளிகளை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருக்கக் கூடிய ஒன்றிய அரசாங்கத்தை கண்டிக்கும் வகையில், சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி 10ஆம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளக்கூடிய டெல்லி கருத்தரங்கில், தஞ்சை மாவட்டத்தில் பேருந்து 115 பேர் கலந்து கொள்வது" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி