ரெட்டிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்து 1.350 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.