திருவாரூர்: மண் வளம் தொடர்பான கருத்தரங்கு (VIDEO)

69பார்த்தது
மன்னார்குடி அருகே அரிச்சபுரம் கிராமத்தில் மண்ணே பிரதானம் தலைப்பில் விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. ஸ்ரீ பயோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் KRK. ரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ஹேமா முன்னிலை வகித்தார். 

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாலசரஸ்வதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மண்டல மேலாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதுராசுரேஷ் மற்றும் விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

ஸ்ரீ பயோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரெட்டி பேசுகையில் தற்காலத்தில் ராசாயன உரத்தின் பயன்பாட்டால் மண்ணின் வளம் குறைந்து மகசூளை அதிகப்படுத்த முடியவில்லை. மண் வளத்தை மேம்படுத்த நன்மை செய்யும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். 

நிகழ்ச்சியில் "மண்ணே பிரதானம்" என்ற வாசகம் அடங்கிய பதாகை வெளியிடப்பட்டது. மண்ணின் வளத்தை பெருக்க ராசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துதல், குறிப்பாக பயிர்களின் வேர்களை வளப்படுத்தவும், மண்ணில் உள்ள சத்துக்களை வேர் மூலம் தாவரங்களுக்கு வழங்க உயிர் உரங்களின் அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. நிலத்தின் மண் வளத்தை பரிசோதித்து மண்ணின் கார, அமில தன்மைக்கு ஏற்ற உயிர் உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்துவது தொடர்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டன

தொடர்புடைய செய்தி