கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணம்: காவிரி ஆற்றில் வடகரையில் புறவழிச் சாலை அமைக்க கூட்டம்

கும்பகோணம் பாலக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதையொட்டி காவிரி ஆற்றின் வடகரையில் புதிதாக புறவழிச் சாலை அமைப்பதற்கு ரூ 29. 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலை பணிகள் விரைவாக தொடங்கபடுவது குறித்து கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் தலைமையில் சட்டமன்ற அலுவலகத்தில் அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி இப் பணியை உடனே செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இக் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப. தமிழழகன் அவர்கள், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் அவர்கள், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரி செந்தில் தம்பி அவர்கள், மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా