வலங்கைமான்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

63பார்த்தது
வலங்கைமான்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் முரளி மகன் விஜய் (21). இவர் கூலி வேலை செய்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் மேகநாதன்(41) கொத்தனாராக உள்ளார். சனிக்கிழமை இருவரும் கும்பகோணத்தில் உள்ள எலுமிச்சங்காபாளையம் பிரதான சாலையில் கலியபெருமாள் மகன் லெனின் (41) என்பவருக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்டும் வேலை செய்து கொண்டிருந்தனர். வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு உள்ளது. 

இதில் சித்தாள் வேலை செய்த விஜய் அர்த்த கம்பியை தவறுதலாக பிடித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், விஜயை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி