நடைபயிற்சியாளர்கள் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
கும்பகோணத்தில் நடைபயிற்சியாளர்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 20 ஆவது வார்டில் பச்சையப்பன்குளம் உள்ளது. இதில் காலை மாலை இரண்டு நேரங்களிலும் இப்பகுதியைச்சேர்ந்த ஆண் பெண்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் குளத்தின் நடைபயிற்சி பகுதியில் யோகா மையம் இருந்தது. இந்த மையத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். இதனால் நடைபயிற்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனை முன்னிட்டு கும்பகோணம் முன்னாள் வழக்குரைஞர் சங்க தலைவர் சா. விவேகானந்தன் தலைமையில், நடைபயிற்சி மாதர்கள் சங்க தலைவர் பி. செந்தில் முன்னிலையில் நடைபயிற்சியாளர்கள் பச்சையப்பன் குளத்தின் கிழக்கு வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட யோகாமையத்தை இடித்தும், பொருள்களை எடுத்துச்சென்ற நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உயர்நீதி மன்றத்தை தவறாக வழிநடத்தி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை, நீர்நிலைகளை அகற்றிய மனுதாரர் ராஜேந்திரனை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஜி. மணி, ஜி. வாணி எப். வயலட்மேரி, எம். நாகஜோதி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி