கும்பகோணத்தில் ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணிகள்.

55பார்த்தது
கும்பகோணத்தில் ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணிகள்.
கும்பகோணத்தில் ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணிகள்.

கும்பகோணம்- திருச்சி இடையே இயக்கப்படும் ரயில்களில் பெட்டிகள் குறைப்பதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் ரயில் நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி நதி பாசன விவசாயிகள் சங்க செயலாளா் சுந்தர விமலநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்க துணைத் தலைவா் மாறன், கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் மகேந்திரன் முன்னிலை வகித்தனா்.

மயிலாடுதுறையிலிருந்து திருச்சி செல்லும் ரயிலை 8 பெட்டிகள் கொண்ட மின்சார தொடா் வண்டியாக இயக்குவதை கைவிட்டு, தொடா்ந்து 12 பெட்டிகள் கொண்ட சாதாரண ரயிலாக இயக்கவும், மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லும் தொலைதூர ரயிலில் கழிவறையுடன் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும், தஞ்சாவூா் விழுப்புரம் இடையிலான ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக உடனடியாக மாற்றவும் கோரி முழக்கமிட்டனா்.

கும்பகோணம் தஞ்சைக்கிடையே தினசரி பயணிப்போா் குழு ஒருங்கிணைப்பாளா் மோகன், அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் சத்யநாராயணன், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளா் சரவணன், தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்க செயலாளா் கிரி உள்ளிட்டோா் பேசினா். மருத்துவா் ஆனந்த் நன்றி கூறினாா்.

பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கும்பகோணம் ரயில் நிலைய மேலாளா் ரமேஷிடம் வழங்கினா்.

தொடர்புடைய செய்தி